ஆன்மீகம்செய்திகள்

குற்றாலத்தில் கோவில் நிர்வாக அலட்ச்சியத்தால் மிகபழமையான விநாயகர் சிலை திருட்டு !


தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று திருக்குற்றால நாதர் திருக்கோவில். இத்திருக்கோவிலின் ரத வீதி பகுதியில் அமைந்துள்ள ஏரல் விநாயகர். மற்றும் ராஜகோபுர விநாயகரும் என்று அழைக்கப்படும் விநாயகர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலையை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்று அப்பகுதியில் வணிகம் செய்யும் ஒருவர் இன்று காலையில் விசில் செய்திப் பிரிவிற்கு தகவல் அளித்தார். உடனடியாக விசில் செய்திப் பிரிவில் சார்பாக திருக்கோவிலுக்கு சென்றோம் கதவு பூட்டப் பட்டிருக்கிறது உள்ளே சிலை இல்லை இன்றுகாலையில்

அப்பகுதியில் உள்ளவர் தரிசனம் செய்ய செல்லும் பொழுது அதிர்ச்சி அடைந்தனர் பூட்டு வெளியே பூட்டப் பட்டிருக்கிறது உள்ளே சிலையைக் காணோம் என்று அதிர்ச்சி அடைந்தனர். இத்திருக்கோவிலில் அருகே உள்ள வயதானவர்களும் விசாரணை செய்தோம்ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான விநாயகர் திருக்கோவில் இத்திருக்கோவில் மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது வேற ஒரு தகவல். இந்த விநாயகர் கோவில் தமிழகத்தில் வருடத்திற்கு இரு முறை ஓடக்கூடிய 5 தேர்களும் முதல் பூஜையை விநாயகரை வழிபட்டு பிறகு தான் தேரில் வலம் வரும் உற்சவர்கள்..மிகவும் சக்தி வாய்ந்த பழமையான விநாயகர் சிலையை காணவில்லை இதற்கு முழு காரணம் இத்திருக்கோயில் நிர்வாகமே.. இத்திருக்கோவில் நிரந்தரப் பணியாளர்கள் இல்லை என்பது நிதர்சன உண்மை. தற்போது தனியார் செக்யூரிட்டி அவர்களால் இத்திருக்கோவிலில் முறையான பாதுகாப்பு இல்லை. தமிழக அரசு உடனடியாக இத்திருக்கோவில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் இத்திருக்கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன் இத்திருக்கோவிலின் சார்பு கோவிலானகுற்றால அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உண்டியல் பணம் திருட்டு போயுள்ளதாக தகவல் வேறு. கூத்தர் கோவில் கலசமும் கடந்த இரு மாதங்களுக்கு முன் காணவில்லை.கலசம் இல்லாமல் வெறுமையாக காட்சியளிக்கிறது இத்திருக்கோவில் சார்பு கோவிலான கூத்தர் கோவில் இப்படி பழமையான கோவிலின் பல்வேறு சம்பவங்கள் இப்போது நடைபெறுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைகின்றனர் உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

மீண்டும் காணாமல் போன சிலையை கண்டுபிடித்து அதேஇடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று மற்றும் கோவில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழும்புகின்றன விசில் செய்திக்காக குற்றாலத்திலிருந்து வீரமணி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button