நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நாகை மாவட்டத்தின் 21வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட அருண் தம்புராஜை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் எளிமையான முறையில் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். அதன் பின்னர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கிராம அலுவலர், தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகிய மூன்று பேருக்கு பணி ஆணையையும் வழங்கினார். அவனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய ஆட்சியர் அருண் தம்புராஜ், விவசாயத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறிய அவர், உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் புகார் பெட்டியில் மனு அளித்த மக்களுக்கு, முன்னுரிமை அளித்து அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்துவைக்கப்படும் என்றார். மேலும் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய ஆட்சியர், நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிக்க, கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ச.ராஜேஷ்
நாகை மாவட்ட நிருபர்