இன்று 17 .6. 2021 காலை காவல் ஆணையரத்தில் கடந்த
12. 5 .2021 அன்று இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உடல் நோய்வாய்ப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் கண்டறியப்பட்ட மொழியறியாத இளைஞர் ஒருவரை *சென்னை பெருநகர காவல் கரங்கள் உதவி மையம்* மூலமாக தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கியும் மனநல காப்பகத்தில் அனுமதித்து உடல்நிலை மற்றும் மனநிலை சீராகி அடையாளம் அறியப்பட்ட ஜாஃபர் அலி @ மொஜாகர்அலி C/Oபைசீநூர்அலி
அசாம் மாநிலம் என்பவரை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரது குடும்பத்தினருடன் ஒன்று சேர்க்கும் நிகழ்வில் *சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள்* கலந்துகொண்டு கண்டறியப்பட்ட ஜாபர் அலி என்கிற மொஜாகர் அலியை அவரது சகோதரர் இஸ்மாயில் அலியிடம் ஒப்படைத்து அவர் பயணத்திற்கு தேவையான ஆடைகள் உணவுப் பொருட்கள் வழங்கியும் நோய்வாய்ப்பட்டு மீட்கப்பட்ட ஜாபர் அலிக்கு உதவி செய்த தன்னார்வத் தொண்டு ஆர்வலர்கள் திரு செந்தில்குமார் திரு கிளமெண்ட் மற்றும் அன்பகம் காப்பக இயக்குனர் திருமதி ரபியா ஆகியோருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கியும் அன்பகம் காப்பகத்தின் பயனுக்காக அரிசி மூட்டை உணவு மளிகை பொருட்கள்தொகுப்பை காவல்துறை சார்பில் வழங்கி கௌரவித்தார் .
இந்நிகழ்வில் உடல்நலம் மனநலம் பாதிக்கப்பட்ட ஜாபர் அலி என்கிற மொஜாகர் அலி தனது குடும்பத்தினருடன் காவல் ஆணையர்க்கு சால்வை அணிவித்து நெகிழ்வுடன் நன்றி பகிர்ந்தார் உடன் கூடுதல் காவல் ஆணையர் தெற்கு டாக்டர் .N.கண்ணன்
இ கா ப.துணை ஆணையர்கள் திரு ராமர் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திருமதி விமலா திரு ஸ்ரீதர் பாபு நுண்ணறிவு பிரிவு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் சென்னை நியாஸ்