க்ரைம்

கோவில் மாடுகளை இலவசமாக வாங்கி தருவதாக கூறி மோசடி இருவர் கைது!

தூத்துக்குடிமாவட்டம்

கோவில்பட்டி அருகே கோவில் மாடுகளை இலவசமாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி இந்திரா நகர் பகுதியில் 2 பேர் அப்பகுதி மக்களிடம் தாங்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் டிரஸ்டினை சேர்ந்தவர்கள் என்று கூறி கொண்டு

கோவிலில் நேர்த்திகடனாக விடப்பட்ட பசுக்களை இலவசமாக வழங்க உள்ளதாகவும், பசு மாடு வேண்டாம் என்றால் 30 ஆயிர ரூபாய் பணம் வங்கி கணக்கில் பண வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் பயன் பெற விரும்பவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் தரும்படி கேட்டுள்ளனர். சில பெண்கள் அவர்கள் பேசுவதை நம்பி ஆதார் மற்றும் வங்க கணக்கு புத்தகத்தின் நகலை கொடுத்துள்ளனர். அவற்றினை வாங்கி கொண்டவர்கள் இதற்கு கட்டணமாக ரூ4500 தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் தற்பொழுது தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஒரு நாளுக்கு பணத்தினை ரெடி பண்ணுங்கள் என்று தெரிவித்துள்ளனர். வள்ளியம்மாள் என்ற முதாட்டியிடம் மட்டும் ரூ 500 வாங்கியுள்ளனர். நாளை வருகிறோம் என்று இருவரும் கூறிவிட்டு சென்றுள்ளனர். இருவரின் பேச்சுகளும் முன்னுக்கு பின் முரணாக இருந்த காரணத்தினால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி துணைதலைவரிடவ ரிம் இது பற்றி கூறியுள்ளனர். நாளை வந்தால் தெரியப்படுத்துக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்து விசாரணை செய்யும் என்று கூறியுள்ளனார்.

அதே மீண்டும் இருவரும் பெண்களை தொடர்பு பணம் ரெடியாகி விட்டதாக கேட்டுள்ளனர்.இவர்களும் பணம் ரெடியாக இருக்கிறது என்று தெரிவித்ததும் இருவரும் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த 2 பேரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பேசியுள்ளனர். அடையாள அட்டை கேட்ட போது இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் தங்களுக்கு போலீஸ் உயரதிகாரிகள் தெரியும் என கூறியவுடன் இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கயத்தார் காவல் துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரித்தபோது

இதில் இருவரும் நெல்லை மாவட்டம் சாயமலை அருகேயுள்ள சிதம்பராபுரம் கிராமத்தினை சேர்ந்த பூல்துரை(47), திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரம் ராமர் காலனியை சேர்ந்த செந்தில்பிரபு (37) என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண் சேர்மசந்தி கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய பைக்கினையும் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி அருகே கோவில் மாடுகளை இலவசமாக தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் மாரி ராஜா

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button