தூத்துக்குடியில் தொடர் மழை போன்ற காரணங்களால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் வரலாறு காணாத விதமாக உப்பின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதுடன் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் இந்த ஆண்டு இயற்கை சூழ்நிலை காரணமாக தொடர் மழை போன்ற காரணங்களால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ஆண்டுக்கு 25 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது 12 லட்சம் டன் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக உப்பின் விலையும் வரலாறு காணாத விதமாக ஒரு டன் ஆயிரத்து 500 ரூபாய் லிருந்து 4500 ஆக உயர்வடைந்துள்ளது இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளுக்கு தேவையான உப்பினை குஜராத்தில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் ஷேக் மதார்