கோவை பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கற்பழித்த ஆனந்த் சர்மா மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை பீளமேட்டில் வசிக்கின்ற பெண் வெளிநாட்டில் பணிபுரிந்து இந்தியா திரும்பியவர்.கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசிக்கின்ற இவருக்கு தொழில் ஆர்வம் அதிகமானதால் அதன் விவரங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். அவரை தொழில் ரீதியாக தொடர்பு கொண்ட ஆனந்த் சர்மா அப்பெண்ணுடன்
நெருக்கமாக பழகியிருந்தார். அப்பெண் கணவரை பிரிந்ததனை சாதகமாக்கி தானும் மனைவியை பிரிந்தவரென நெருக்கமாக பழகியிருக்கின்றார். இதனடையே ஆனந்த நட்பு அப்பெண்ணுக்கு நல்ல ஆறுதலாக தெரிந்தவுடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதற்கிடையில், இருவரும் வெளியூருக்கு சென்ற நிலையில் திருமணம் செய்வதாக கூறி
கற்ப்பழித்திருக்கின்றார் ஆனந்த். அப்பெண் ஆனந்தின் வார்த்தையினை நம்பி ஏமாந்தார். இதனை அடுத்து ஆனந்தை அலைபேசி அழைப்பு திரட்டிய அப்பெண்ணிற்கு ஆனந்த் திருமணமாகி தனித்த விவாகரத்தான பெண்களை ஏமாற்றி உல்லாசமாக வாழ்ந்தது தெரியவந்தது.இதனை புகாராக மகளிர் ஆணையத்தில் தர போலிஸார் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனை அடுத்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் தந்த புகாரின் அடிப்படையில் கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு வதிவு செய்திருக்கின்றனர்.
செய்தியாளர் காரத்திக பாலாஜி