
தமிழக காவல்துறையில் சில மாவட்டங்களில் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தி வருகின்றனா் என தகவல்கள் வருகிறது
இது குறி்த்து காவலர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்
முன்களப் பணியாளா்களில் முக்கியமானவர்களக களம் நின்று தமிழக அரசு துறைகளிலே அதிக உயிரை இழந்தவா்களிடம் கட்டாயப்படுத்துவது முறையல்ல
இதே ஆர்வத்தை காவல்துறையினா் கொரோனா தொற்றால் கொத்து கொத்தாக உயிரிழந்த போது விடுப்பு, ஓய்வு, மற்ற துறைகளுக்கு வழங்கியது போன்ற ஊக்க தொகை, இறந்த காவல்துறையினருக்கு நிவாரண நிதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காப்பீடு பெற்று தர அரசாங்கத்தை, காவல்துறை மேலிடத்தை கட்டாயப்படுத்தாது ஏன்.?
எனவும் தங்களின் ஆதங்கத்தை பதிவு செய்துள்ளனர்
துறை ரீதியான உயர் அதிகாரிகள் இதற்க்கு தீர்வு காண வேண்டும் என்பதே காவலர்களின் விருப்பமாகவே உள்ளது