
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.