செய்திகள்

2கோடி மதிப்பிலான திமிங்கல கல் திருச்செந்தூரில் பறிமுதல் கடத்தல் கார்ரகள் கைது

திருச்செந்தூர் 21-6-21

திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய 2 கிலோ எடையுள்ள அம்பர்கீரிஸ் என்ற மெழகு போன்ற பொருளை திருச்செந்தூர் போலீசார் கைபற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது.

தஞ்சாவூலிருந்து காரில் கொண்டு வந்து திருச்செந்தூர் பகுதியில் விற்க முயன்ற போது சிக்கியது. இது தொடர்பாக 6 பேபேரை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்செந்தூர் பகுதியில் ஒருவித விலையுர்ந்த பொருளை கடத்தி கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் தனிப்படைபோலீசார் தாலுகா ஆபீஸ் ரோட்டில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அதில் மெழுகு போன்ற பொருளை பையில் மறைந்து வைத்திருப்பது தெரியவந்தது. அதுகுறத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கீரிஸ் என்பது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும். இது இந்தோனோசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடி கணக்கில் மதிப்படையது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூர் மாவட்டம் பாளையம்பட்டி வடக்கு தெரு இளங்கோவன்(52), விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை செங்குளம் வாமபுரம் ராம்குமார்(27), நாகப்பட்டணம் ஆலியூர் வடக்கு தெரு முஹம்மது அஸ்லம்(33), திருச்சி அரியமங்கலம் திருமகள் தெரு ராஜா முஹம்மது(34), தஞ்சாவூர் யாகப்பநகர் 4வது குறுக்கு நர்மதை தெரு வெங்கடேஷ்(48), அதே ஊரைச் சேர்ந்த புதுக்கோட்டை ரோட்டை சேர்ந்த ஜான்பிரிட்டோ(48) என்பது தெரியவந்தது.

இவர்கள் அம்பர் கீரிஸ் என சொல்ல கூடிய விலையுர்ந்த பொருளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது. விலையுர்ந்த அம்பர் கீரிஸ் மெழுகு போன்ற பொருளை இங்கிருந்து இலங்கை கடத்தி சென்று அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

பிடிப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஆம்பர் கீரிஸ் மற்றும் 6 பேர், அவர்கள் வந்த காரையும் திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர்.

Show More

Related Articles

One Comment

  1. அருமை,விசில்
    அனுப்புங்கள்
    தோழமையுடன்
    சி கே ராஜன் MSc
    21,முதல் தளம்,
    வடக்கு கவர தெரு,
    மஞ்சகுப்பம்,
    கடலூர்-607001
    கடலூர் மாவட்டம்
    9488471335

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button