சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் பஜாரில் உள்ள அவர்களது கடை முன்பு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர். கனிமொழி எம்பி வியாபாரிகள் மலர் தூவி அஞ்சலி.
கடந்த ஆண்டு கொரனா ஊரடங்கு விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ள நேரத்தை தாண்டி கடைத் திறந்ததாக கூறி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதில் வியாபாரிகளான தந்தை, மகன் ஜெயராஜ்,பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற ஓர் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சாத்தான்குளம் பஜாரில் உள்ள பென்னிக்ஸ் கடை முன்பு வைக்கப்பட்ட அவர்களது உருவபடத்திற்கு ஜெயராஜ் குடும்பத்தினர் கனிமொழி எம்.பி ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் சாத்தான்குளம் வியாபாரிகள் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர் வழக்கறிஞர்கள் என திரளானோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து கனிமொழி எம்பி ஜெயராஜ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்த நினைவு அஞ்சலியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சாத்தான்குளம் ஊர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.