கோவையில் சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் குடியேறி கட்டட வேலை செய்து வருகிறார். கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் தென்காசி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பிரகாசுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதத்தில் பிரகாசும் அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஒரே வீட்டில் வசிக்க துவங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்தப் பெண்ணின் மூத்த மகளிடம் கட்டாயபடுத்தி பாலியல் உறவு கொண்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் சப்தம் கேட்டு அவளது தங்கை வீட்டிற்கு உள்ளே வந்து பார்த்த பொழுது அக்காவை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் அந்த சிறுமி இடம் இதை வெளியில் சொன்னால் உனது அம்மா, அக்கா மற்றும் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி இருக்கிறார். இதனால் அந்த சிறுமி பயந்து போய் யாரிடமும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் பிரகாஷால் பாலியல் உறவுக்கு ஆட்பட்ட அந்தப் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் உறவு நடந்திருப்பதை உறுதி செய்தனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
க்ரைம்
2 weeks ago
இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
க்ரைம்
2 weeks ago
அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
க்ரைம்
2 weeks ago
காதலியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
க்ரைம்
4 weeks ago
மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை
2 weeks ago
இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி
2 weeks ago
இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
2 weeks ago
அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
2 weeks ago
காதலியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
3 weeks ago
திருமணம் மீறிய உறவிற்கு சம்மதிக்காததால் பெண் படுகொலை..!
3 weeks ago
கடன் கொடுத்தால் அரிவாளை காட்டி மிரட்டுவீங்களா?
3 weeks ago
புலிப்பல், யானை தந்தம் விற்பனை செய்தவர்கள் கைது
4 weeks ago
மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை
August 7, 2025
ஆணவக் கொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் திமிர் நடை போட்ட சுர்ஜித்
August 7, 2025