தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு; குடியுரிமை வழங்க கோரி கோரிக்கை: இலங்கை பெண்கள் கனிமொழியுடன் ஆர்வத்துடன்செல்பி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 73 வீடுகள் உள்ளது. இந்த முகாமில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீடு வீடாகச் சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது குடிநீர், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அப்போது தாங்கள் இந்தியாவிற்கு வந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டதால் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
மேலும் இலங்கை தமிழர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார் இதை தொடர்ந்து
முகாமிலுள்ள இலங்கை தமிழ் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.