நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரனா வார்டில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் மூச்சு திணறி பலி 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனையில் கொரனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த திட்ட குடி ராஜா என்பவர் ஆக்சிஜன் அகற்றப்பட்டதால் பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்ந்து நேற்று இரவு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை தடை பட்டதால் 15க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து திடிரென மூச்சு திறனல் ஏற்பட்டுள்ளது இதனால் மருத்துவமனையே பெரும் பரபரப்புக்குள்ளாகியது. மருத்துவமனை ஊழியர்கள் கையில் கிடைத்த சிலிண்டரை கொண்டு ஓரிரு பேருக்கு சிகிச்சை அளித்த நிலையில் மற்றவர்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அதிக அளவு வேகமாக குறைந்துள்ளது இதில் சிகிச்சையில் இருந்த தனியார் வங்கி உதவி மேலாளர் ராஜேஷ் என்பவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்
நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த 36 வயதான ராஜேஷ் கடந்த 11 நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜேஷ் உடல் நலம் தேறி வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனது குழந்தையுடன் வீடியோ காலில் பேசி கொண்டிருந்தபோதுதான் ஆக்சிஜன் தடை பட்டதாகவும் அடுத்த பத்து நிமிடத்தில் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது
ராஜேஷ் உயிரிழப்பை அருகிலிருந்து பார்த்த அவரது மனைவி கணவரின் மரணத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி மருத்துவ பகுதியின் வாசலில் அமர்ந்து கடும் அழுது புரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு பதற்றம் ஏற்பட்டது
நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் தான் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதாகவும் ஆக்சிஜன் நிறுத்தப்படவில்லை என்றால் வெடித்து மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சம்பவம் மட்டும் இல்லாமல் தொடர்ந்து கொரரானா நோயாளிகள் கவனக்குறைவு உடனே அனுகு வதாகவும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு ஆக்சிஜன் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் அவதி அடைந்து வருவதாகவும் இது குறித்து மருத்துவமனையில் கேட்டால் தேவை என்றால் வீட்டில் இருந்து இன்வெர்ட்டர் எடுத்து வந்து வைத்துக்கொள்ளுங்கள் எனவும் சிகிச்சை பெற விருப்பம் இல்லையென்றால் வீட்டுக்குச் செல்லுங்கள் என அலட்சியமாக கூறுவதாகவும் பாதிக்கப்பட்ட நோயாளி உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்
நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு தன்னார்வலர்களால் குரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகள் நூற்றுக்கணக்கில் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் கொரனாதொற்று கணிசமாக குறைந்து வரும் நிலையில் மருத்துவமனையின் அலட்சிய போக்கால் சிகிச்சையில் இருப்போரின் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது நாகையில் வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்