அரசு மரங்கள் அவலம்:
தொடரும் பனை மரங்கள் அழிவு ?
மீட்சி பெறுமா மாநில மரங்கள்?
இன்று தென்காசி மாவட்டம் குற்றாலம்,பழையஅருவி அருகே சாலையோரம் நின்றிருந்த பல பனை மரங்கள் வெட்டி எரிக்கப்பட்டுள்ளது . பொது நிலங்களில் இருந்த அம்மரங்கள் அரசுக்கு சொந்தமானதாகும் மற்றும் சிந்தாமணி நாதசுவாமி திருக்கோவில் இந்து அறநிலைக்துறைக்கு உட்பட்டதும் ,கூணிக்கரை பனந்தோப்பு பகுதியிலிருந்த பல பனைமரங்கள் சமூக விரோதிகளால் துண்டு துண்டாக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன என்றும் மேலும் பல மரங்கள் சாயும் வண்ணம் வேர்ப்பகுதி வரை ஜே.சி.பி வைத்து குடைந்து வைத்துள்ளனர் என அப்பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ள திரு .சீனிவாசன் என்பவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று தமிழக மாவட்டங்கள் தோறும் பனைமரங்கள் வெற்றி அளிக்கப்படுவதுடன் பொது இடங்களில் உள்ள பனைமரங்களும் சமூக விரோதிகளால் வெட்டி ரூபாய். 100, 50 என விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அந்தந்த பகுதிகளின்
சம்பந்தப்பட்ட
மாவட்ட ஆட்சியர்கள் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் இதுகுறித்து முறையாக வழக்கு பதிவு செய்தால் இவை தடுக்கப்படலாம்.
மேலும் இதுபோன்று அறிய பலவகைகளில் பயன்பட்டு வரும் மருத்துவத்தன்மை வாய்ந்த பனை மரங்களை காக்கும் வகையில் தமிழக அரசு உடனடி தீர்வாக பனை மரங்கள் வெட்டுவதை தடை செய்தும், பனைத் தொழிலை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டி சமூக ஆர்வலர்கள் ,பனை ஆர்வலர்கள், சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
பனை இளவரசி கவிதா காந்தி
நிறுவனர்
பனையெனும் கற்பகத்தரு அறக்கட்டளை.
கைப்பேசி.9080428205