திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் C.K.பாலாஜி, S.வினோத்குமார், R.விஜயகுமார் தலைமையில் திண்டுக்கல் மையப்பகுதியில் அமைந்திருக்கும் காளத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சாமி சிலைகள் மற்றும் நாயக்கர் கல் தூண்கள், கல்வெட்டுகள் என கண்டெடுக்கப்பட்டுள்ளன.மேலும் அந்த இடத்தில் பல சிலைகள் மற்றும் கல் தூண்கள் இருப்பதாக தெரிகிறது, இவை அனைத்தும் ஏற்கனவே அபிராமி அம்மன் கோவிலுக்குள் இருந்த சிலைகளாக அறிகிறோம்.இந்த சிலைகளை மீண்டும் அபிராமி அம்மன் கோவிலில் வைத்திடவும், மேலும் கண்டறியப்பட்ட சிலைகள் மற்றும் கல் தூண்களை மண்களில் புதைத்த இதற்கு முன்பு இருந்த கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது இந்து அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தனர்
