பொது சேவையில் காவலர்களுக்கு நிகர் வேறு யாரும் இருந்துவிட முடியாது காவல் பணி என்பது சேவையாகவே கருதப்படுகிறது பொதுமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட காவல்துறையில் தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகளை காணலாம் மத்திய மண்டலமான திருச்சி மண்டலத்தில் ஐஜியாக பொறுப்பேற்றிருக்கும் கண்டிப்பும் கண்ணியத்திற்கும் உரிய அதிகாரி பாலகிருஷ்ணன்
முதியவர்கள் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார் அதன் முன்னேற்பாடாக திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் காவலர்கள் பொதுமக்களுக்கு என்ன வாரு உதவலாம் என்பது குறித்து அட்டவணை வெளியிட்டிருக்கிறார்கள்
இது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது அதே வேளையில் காவலர்கள் மத்தியில் மனக்குமுறலை ஏற்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை காரணம் சமீப காலமாக ரோந்து செல்கின்ற காவலர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்
இதனால் மன உளைச்சலில் உள்ள காவலர்கள் மேலும் மேலும் பொதுமக்களிடம் அணுகுமுறையை அதிகப்படுத்துவது ஒருவித சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது என்று காவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்
இதுபோன்ற சேவையில் ஈடுபடும் கடைநிலை காவலர்களுக்கு பொது மக்கள்தான் காவலாக இருந்து அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்
விசில் செய்திகளுக்காக
திருச்சி முபாரக்