போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் காத்த போலீசார்.
மன்னிப்பா மனிதநேயமா குழப்பத்தில் வெளிமாவட்ட காவலர்கள்… அன்மையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்குச் சென்ற காவலர் ஒருவரை அப்பகுதியிலுள்ள ரவுடி ஒருவன் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டியும் கழிவு நீரை எடுத்து வீசியும் அவமானப்படுத்தினான்…
அதுவரை பொறுமை காத்து இருந்த காவலர் சக காவலர்களை அழைத்து வருவதற்குள் அவன் தப்பிவிட்டான்.
விடாமுயற்சியுடன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்தவனை பிடித்து ஊர் வந்து சேர்ந்தனர். அவனை பிடித்ததும் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி வெளி மாவட்ட போலீசாரும் மகிழ்ச்சியடைந்தனர்.
எப்படியாவது அவன் இன்று பாத்ரூமில் வழுக்கி விழுந்து விடுவான் என்று சக காவலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
நடந்ததோ வேறு அவனை பத்திரமாக அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை அளித்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவனை சிறையில் அடைத்தனர். பாத்ரூமில் வழுக்கி விழுந்து இருப்பான் என்கின்ற ஆவலுடன் போலீசார் ஒருவரிடம் விசாரித்த போது நம்மை மெய்சிலிர்க்க வைத்தது அவரது பதில். குடி போதைக்கு அடிமையான ஒருவனை நாம் எப்படி தண்டிப்பது, அவன் தவறு செய்யும் போது சுய நினைவில் இல்லை சுய நினைவு இல்லாத ஒருவனை நாம் அடிப்பது துன்புறுத்துவது மனிதநேயம் இல்லாத செயலாகும் என்று கூறினார். மேலும் அவனை சட்டத்தின் முன் நிறுத்தி விட்டால் அவன் கண்டிப்பாக திருந்தி விடுவான் என்ற நம்பிக்கை இன்னும் தளர்ந்து போக வில்லை என்கிறார் அந்த போலீசார்
காவல்துறையினர் என்றாலே கரடுமுரடாக தான் இருப்பார்கள் என்ற கூற்றை தவிடு பொடியாகியுள்ளது சங்கரன்கோவில் காவல்துறையினரின் மனித நேய செயல்
செய்திகள் : குமரன், சங்கரன்கோவில்