நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை மற்றும் EGS பிள்ளை கல்வி குழுமம் இணைந்து ஆன்லைன் வகுப்பு பற்றிய விழிப்புணர்வு குறும்படத்தை, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் வெளியிட்டார். பின்னர் காவல் கண்காணிப்பாளர் கூறும்போது இந்த விழிப்புணர்வு குறும்படம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் EGS பிள்ளை கல்வி குழுமத்தின் இயக்குனர் விஜயசுந்தரம். ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்