சூலை 6, 2021.
*பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களின் பாதுகாப்பு நலனில் தாயுள்ளத்தோடு அக்கறை கொண்டு, பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*
*தமிழக முதல்வராக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றது முதல் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.*
*கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் மருத்துவத் துறையினர் சுகாதாரத்துறையினர் காவல்துறையினர் இவர்களுடன் தொடர்ந்து தொற்றையும் பொருட்படுத்தாமல் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்த்தனர். இந்த தொற்று நோயினால் ஊடகத்துறையினர் நிறைய பேர் பாதிக்கப்பட்டு அதில் பலர் பலியாகியுள்ளனர். இவர்களின் நலனில் அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து கௌரவப்படுத்தி உள்ளார். அதன் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.*
*அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை வைத்துள்ள பத்திரிக்கையாளர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.*
*கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்*. *
*இன்று பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.*
*பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மீண்டும் ஒருமுறை நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். நன்றி,*
*அ. மிதார் மைதீன்*
*பொதுச் செயலாளர்*
*தமிழ் நாடு பத்திரிகையாளர்கள்*
*பாதுகாப்பு நலச் சங்கம்*
*கைப்பேசி எண்:90030 20511*