மாவட்ட தலைவர் ஜபருல்லாஹ் தலைமை வகித்தார். துணை தலைவர் முஸ்தபா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முகமதுஇஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மதுரபீக், முகம்மதுசுலைமான், சலீம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட துணைச்செயலாளர்கள் சிராஜீதீன், அப்துல்காதர், தமீம்அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கல்லார்ரபீக் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில விவசாய அணி பொருளாளர் இப்ராஹிம் பேசினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டிக்கிறோம். மேக் இன் இந்தியாவில் பெட்ரோல் வாங்க முடியவில்லை. சுவெச் பாரத் இந்தியாவில் சிலிண்டர் வாங்க முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களை சுரண்டும் மோடி அரசை கண்டிக்கிறோம் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஜிபுர்ரகுமான், ரித்தாவுதீன், சாதிக்பாட்சா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகை செய்தியாளர் :ச.ராஜேஷ்