கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் ஒன்றிய அரசின் அக்கறையற்ற போக்கினால் மக்களை பாதிக்கும் விண்ணைத் தொடும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.