மாறுவேடத்தில் வலம்வரும் டிஎஸ்பி தலை தெரித்து ஓடும் கஞ்சா வியாபாரிகள் !
சிவகாசி என்றாவே பட்டாசு காலன்டர் மற்றும் அச்சு தொழில் தீப்பெட்டி தொழில் என நினைத்து கொண்டிருக்கும் வெளியூர் மக்களுக்கு தெரியாது சிவகாசி குற்ற நிகழ்வுகளின் முதலிடம் என்று
கட்ட பஞ்சாயத்து கஞ்சா வியபாரம் ஆள் கடத்தல் என ஒரு சாம்ராஜ்யமே வழி நடத்தி வந்தது சிவகாசி
ஆனால் சிவகாசியின் தற்போதைய நிலையோ தலைகீழாக மாறிவிட்டது
சமீப நாட்களாக
இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன..?
புதியதாக பொறுப்பேற்ற காவல் துனை கண்காணிப்பாளர் பாபு பிரசாத்தான் காரணம்
பொறுப்பேற்ற நாள் முதலாக சிவகாசி பகுதி மக்களின் நிம்மதியை தொலைப்பது யார் அவர்களின் பின்னணி என்ன என்பதை அறிய மிக ஆவலுடன் செயல்பட்டார்
மாறு வேடங்களில் இருசக்கர வாகனங்களில் பகுதியில் உள்ள மூலை முடுக்கெல்லாம் வலம் வர தொடங்கினார். எங்கெல்லாம் குற்ற சம்பவங்கள் நடைபெரும் என தெரிந்து கொண்டு அங்கெல்லாம் தனி ஆளாக சென்று
அங்கிருந்து தமது தனிபடை காவலர்களை வரவைத்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து போதை பொருட்களையும் பறிமுதல் செய்கிறார்
தனிபட்ட ஆர்வத்தின் காரணமாக டிஎஸ்பி செயல் படுவது சிவகாசி மக்களின் மத்தியில் பெரும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்
ஆண்டாண்டு காலமாக கட்ட பஞ்சாயத்து கஞ்சா விற்பனை என சாம் ராஜ்யத்தை கட்டுக்குள் வைத்துள்ள பல ஜாம பாவான்கள் ஆட்டம் கன்டிருக்கிறார்கள் என்பதே உண்மை
விசில் செய்திகளுக்காக ஷாகுல்ஹமீது சிவகாசி