இந்த ஆபரேஷன்படி ரவுடிகள் இரு வகைகளாக பிரிக்கப்படுவார்கள். அதாவது கடந்த 10 ஆண்டுகளாக ரவுடிகள் செய்த குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவார்கள். மன்னிப்பு கேட்டு திருந்தி வாழும் ரவுடிகள், பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாத குறைவான குற்றச்செயல் செய்யும் ரவுடிகள் பி என்று வகைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்களை நேரடியாக தாக்குவது, மாமூல் வசூலிப்பது போன்ற குற்றச்செயல்கள் செய்யும் ரவுடிகள் ஏ பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.
முழுமையாக அழிப்பு…..
பொதுமக்களை அதிமாக அச்சுறுத்தும் A பிரிவுகளில் உள்ள ரவுடிகள் முதலாவதாக DARE ஆபரேஷன் திட்டத்தின் கீழ் களையெடுக்கப்படுவார்கள். அடுத்ததாக B பிரிவில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை தொடங்கும். நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக சுமார் 39 ரவுடிகள் உள்ளனர் என்றும் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். DARE ஆபரேஷன் மூலம் சென்னையில் ரவுடிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்று சங்கர் ஜிவால் நம்பிக்கை அளித்துள்ளார்.