தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணணயம் அறிவிக்கை எண்.8/2021. நாள்;29.04.2021 – ன்படி நடைப்பெறவுள்ள துறைத்தேர்வுகளில் கொள்குறிவகை தேர்வுகள் (Objective Type Examination) கணினி வழித்தேர்வாக (Computer Based Test) நடைபெறவுள்ளன, இத்துறைத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் / குறிப்புகள், பயிற்சி மாதிரி தேர்வு (Mock Test) மற்றும் அறிவுரைகள் ‘குறித்த காணொளிக்காட்சி (Video Clip) ஆகியன தேர்வாணைய இணணயதளத்தில்
(https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx)
வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வுக்குத் தயாராகும் வகையிலும், விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையிலும் பயிற்சி மாதிரி தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.