தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காவலர்கான உடல் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது இதில் இரண்டாம் நிலை காவலர் காண எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்ற அவர்கள் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது இதில் எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டம், உள்ளிட்ட உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். தென்னக ரயில்வே டிஐஜி ஜெயகௌரி மற்றும் பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலையில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.