செய்திகள்

கனிமவளம் கொள்ளை : வானூர் அருகே கூழாங்கற்கள் கொள்ளை

வானுார் அருகே செம்மண் நிலப்பரப்பில் பல அடி ஆழம் தோண்டி கூழாங்கற்கள் எடுத்து கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் சர்வதேச நகரமான விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அமைந்துள்ளது. இப்பகுதிமுழுதும் பல ஏக்கர் பரப்பளவில் செம்மண் நிலப்பகுதியாக உள்ளது. இங்கு மானாவாரி முந்திரிபயிரிடப்படுகிறது.இந்த நிலப்பரப்பில் கூழாங்கற்கள் அதிகளவில் புதைந்துள்ளன. இதனால் விவசாயம் செய்யமுடியாது என நினைத்த விவசாயிகள், நிலங்களை குத்தகை மற்றும் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர்.
நிலத்தை வாங்கியவர்கள் மண்ணில் கூழாங்கற்கள் வளம் உள்ளதை கண்டுபிடித்து, 10 ஆண்டுகளுக்கும்மேலாக அரசு அனுமதியின்றி கூழாங்கற்களை, தோண்டி எடுத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.குறிப்பாக வானுார் அடுத்த ராயபுதுப்பாக்கம் பனைமரத்தோப்பில் இருந்து மாத்துாருக்குகுறுக்குப் பாதையில் செல்லும் காட்டுமேடு பகுதியில் பொக்லைன் மூலம் பல இடங்களில் 10 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி எடுக்கின்றனர்.இதற்காக நிலத்தில் இடையூறாக இருக்கும் முந்திரி மரம், பனை மரம், தைலமரம் ஆகியவற்றையும் வெட்டிஅகற்றுகின்றனர்.
தோண்டி எடுக்கப்படும் கூழாங்கற்களை சல்லடை மூலம் சலித்து மண்,சிறிய கற்கள், பெரிய கற்கள் என ரகம் பிரிக்கின்றனர்.சிறிய கற்களுக்கு சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதியில் அதிகம் கிராக்கி இருப்பதால்இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். சிறிய மற்றும் பெரிய கற்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.பகிரங்கமாக இயற்கை வளம்கொள்ளை போவதை வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

இந்த கூழாங்கற்களைஆழ்துளை கிணறு, பூங்கா, மழை நீர் சேகரிப்பு, தொழிற்சாலை மற்றும் பங்களா வீடுகளின் அழகிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.தொடர்ந்து பள்ளம் தோண்டி கூழாங்கற்கள் எடுப்பதால், விரைவில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கனிமவளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வானுார் பகுதியில் இயற்கை வளத்தை பாதுகாக்க முடியும்.அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகூழாங்கற்கள் கொள்ளை போவது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நன்கு தெரியும். ஆனால், கூழாங்கற்கள் குவாரி உரிமையாளர்கள் மாதம் தோறும் அதிகாரிகளை முறையாக கவனித்துவிடுவதால் கண்டு கொள்வதில்லை.கடந்த 2 மாதங்களுக்கு முன், அதிகாரிகள் கண் துடைப்பாக குவாரிகளை கண்டுபிடித்து மூடினர். அதன்பிறகு, வெவ்வேறு இடங்களில் கூழாங்கற்கள் தோண்ட இடம் கண்டுபிடித்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சில முக்கிய புள்ளிகள், இந்த கூழாங்கற்கள் குவாரியை நடத்துகின்றனர். காலை 6:00 மணி முதல் மாலை 6:00மணி வரை செயல்படும் இந்த குவாரிகளில் 150க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பகல் நேரங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் வருவதை கண்காணிக்க தனியாக ஒரு குழுவே செயல்படுகிறது. பகல் நேரங்களில் கூழாங்கற்கள் தோண்டும் பணியும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக கடத்தும் பணியும் கனக்கச்சிதமாக நடந்து வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button