செய்திகள்

தங்க நகையை மீட்டு குறைந்த வட்டிக்கு அடமானத்தில் எடுத்துக் கொள்வதாக கூறி 420 கிராம் தங்க நகை மோசடி..

ஜியோ வி. பி. எல் தங்க நகை கடன் நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர் புகார். வேலியே பயிரை மேய்ந்த கதை. போலி ஆவணம் தயாரித்து நகையை அபேஸ் செய்த அடகு கடை மேனேஜர் உட்பட 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு.

கோவை. ஆகஸ்ட். 12-

கோவை நீலம்பூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 52 பவுன் நகையை அடகு வைத்து இருந்தார்.

இதை தனியாருக்கு சொந்தமான ஒரு அடகு கடைகாரர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலமாக குறைந்த வட்டியில் எங்களிடம் பணம் தருகிறோம் எனக் கூறினர்.

அந்த நகையை திருப்பி அவர்களுடைய நிதி நிறுவனத்தில் வைக்கச்சொல்லி வற்புறுத்தியதால் அவருடைய மகள் ப்ரியாவும் தகப்பனாரும் சேர்ந்து நகையை திருப்பி தனியார் நிதி நிறுவனத்தில் வைத்தனர்.

மீண்டும் திரும்பிச் செல்லும் பொழுது உங்களுடைய நகை கிடையாது என கூறிவிட்டனர். இதுகுறித்து மகள் பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட அடகு கடை 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீலம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி இவர் கோவையில் உள்ள தனியார் தங்க நகை அடமான கடையில் 420 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜியோ வி.பி.எல் எனும் நிதி நிறுவனம் டெலி காலிங் மூலம் துரைசாமியை தொடர்பு கொண்டு உங்களுடைய தங்க நகைகளை மீட்டு அதற்கு அதிகமான கடன் தருகிறோம் மேலும் அதற்கான வட்டியும் குறைவு என்று கூறியுள்ளனர்.

இருந்தபோதும் இதை மறுத்த துரைசாமி தொடர்ந்து பலமுறை அந்த நிறுவனம் மீண்டும் மீண்டும் தொடர்பு கேட்கவே சரி என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் ஜியோ வி பிஎல் நிறுவனம் அந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து 11 தவணைகளாக துரைசாமியின் 420 கிராம் தங்க நகைகளை மீட்டு அவர்களுடைய நிதி நிறுவனத்தில் வைத்துள்ளனர்.

இந்தநிலையில் ஜியோ பிபிஎல் நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கப் பெறாததை எடுத்து அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு நகைகளை மீட்க வேண்டும் என்று துரைசாமி கூறியுள்ளார்.

ஆனால் நிறுவனத்தினர் காலதாமதம் செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து துரைசாமி அவருடைய மகள் பிரியா என்பவரை அழைத்துக்கொண்டு அந்த நிறுவனம் சென்று நகைகளை மீட்பதற்காக எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அந்த நிறுவனத்தினர் உங்களுடைய நகைகள் இங்கு இல்லை குறைந்த அளவே உள்ளது. என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி மற்றும் அவருடைய மகள் பிரியா கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் பார்த்தசாரதி மற்றும் நிறுவன மேலாளர் வித்யா காசாளர் ஜாஸ்மின் மற்றும் விஷ்ணு, மற்றும் பிரபு ஆகிய 5 பேர் மீதும் தங்களுடைய நகைகளை மோசடி செய்து அபகரித்து விட்டதாகவும் மேலும் போலி கையொப்பமிட்டு நகைகளை கையாடல் செய்ததாக புகார் அளித்துள்ளனர்.

புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட துரைசாமியின் மகள் பிரியா கூறுகையில்:-

நாங்கள் தனியார் நிறுவனத்தில் அடகு வைத்த 420 கிராம் நகைகளை ஜியோ பிபிஎல் என்னும் நிறுவனம் குறைந்த வட்டியில் நகைகளை அடகு எடுத்துக் கொள்வதாக கூறி 10 தவணைகளாக அந்த நிறுவனம் என்ற எங்களுடைய நகைகளை பெற்று அவர்களுடைய நிறுவனத்தில் அடகுக்கு வைத்தனர்.

இந்தநிலையில் எங்களுடைய நகைகளை மீட்பதற்காக அந்த நிறுவனத்திற்கு சென்ற பொழுது இன்று வாருங்கள் நாளை வாருங்கள் என்று காலம் தாழ்த்தினர்.

மேலும் உங்களுடைய நகைகள் இங்கு இல்லை என்று பதிலளித்தனர்.

இதனால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் மேலும் என்னுடைய தந்தையின் போலியான கையெழுத்தைப் போட்டு அவர்கள் எங்களுடைய நகைகளை ஏமாற்றி விட்டனர்.

எங்களுக்கு எங்களுடைய நகைகள் வேண்டும் இதற்கு காரணமான அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து எங்களுடைய நகைகளை மீட்டு கொடுக்க வேண்டும்.

மேலும் அவர்களை இந்த குற்றத்திற்காக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button