தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள பிரதான காமராஜ் மார்க்கெட் இருக்கும் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. இந்த தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதால் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பொருட்கள் கொண்டு வரமுடியாமல் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
ஆகையால் ஜெயராஜ் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க கூடாது என வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர் ஆனால் மாநகராட்சி சார்பில் ஜெயராஜ் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் கட்டுவதை கண்டித்து வியாபாரிகள் இன்று பாளையங்கோட்டை தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் சமரசமாக பேசி மாநகராட்சி ஆணையரிடம் அழைத்துச் சென்றனர் சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டு கலைந்து சென்றனர்
பேட்டி: சுந்தரபாண்டியன் காமராஜ் மார்க்கெட் தலைவர்