செய்திகள்டிரெண்டிங்
Trending

“வாங்க பழகலாம்! வாங்க பழகலாம்!” என கூறி பல பெண்களிடம் மோசடி செய்த உளவுத்துறை மகன்

மேட்ரிமோனியல் மூலம் மாப்பிள்ளை தேடும் பெண்களை டார்கெட் செய்து மோசடி செய்திருக்கிறார் இளைஞர் சூர்யா.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் அவர்களிடம் பணம், நகைகள் அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்து அவர்களை டார்கெட் செய்து பெண் கேட்பது போல் சென்று நகை பணம் பறித்து விட்டு அதை வெளியே சொல்ல முடியாத படி அந்தப் பெண்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டால் மோசடியை வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திருச்சி ,கோவை, செங்கல்பட்டு, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட ஊர்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்து இருக்கிறார். அந்த இளைஞர் உளவுத்துறை அதிகாரியின் மகன் என்பது போலீசாரை அதிர வைக்கிறது.

பெங்களூரு உளவுத்துறை அதிகாரியின் மகன் சூர்யா.

இவரது தாயார் ஓய்வு பெற்ற பேராசிரியர். பொறியியல் பட்டதாரியான சூர்யா, மேட்ரிமோனியல் மூலம் மாப்பிள்ளை தேடும் பெண்களை கண்காணித்து அவர்களிடம் தானும் பெண் தேடுவதாக சொல்லி மோசடி செய்து, அந்த பெண்களையும் உல்லாசம் அனுபவித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.

எத்தனையோ பெண்கள் வெளியே சொல்ல பயந்து இவர் மீது புகார் கொடுக்காமல் இருக்கும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பெண் மூலம் சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறார்.

சென்னை அடுத்த கானாத்தூரைச் சேர்ந்த அந்த 24 வயது இளம் பெண் தனது திருமணத்திற்காக மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் இருந்த தொடர்பு எண்ணுக்கு சூரியா தொடர்பு கொண்டிருக்கிறார். பின்னர் அந்த முகவரியை வைத்து நேரடியாக வீட்டிற்கு சென்றிருக்கிறார். தனது பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தான் மத்திய மனித உரிமை ஆணையத்தில் விசாரணை அதிகாரியாக இருப்பதாகவும் பொய் சொல்லியிருக்கிறார். அதனால் என்னை பிடித்து விட்டால் திருமணம் உறுதியானால் வெளிநாட்டிலிருந்து பெற்றோர் வந்துவிடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவரது வேலையை அவர் சொன்ன விபரங்களை, பெற்றோர்களும் நாட்டில் இருப்பதையும் நம்பிய அந்த இளம் பெண்ணும், அவர் குடும்பத்தினரும் அவருக்கு திருமணம் செய்து கொடுக்க முன்வந்துள்ளனர்.

தொடர்ந்து அந்த இளம்பெண்ணுடனும் குடும்பத்தினரிடமும் பேசி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை மயக்கி தனியார் விடுதியில் உல்லாசம் அனுபவித்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த குடும்பத்தினர் நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் பணத்தையும் சாதுரியமாக அவர்அபகரித்திருக்கிறார்.

சூர்யாவும் நடத்தையில் சந்தேகம் கொண்ட அந்த பெண் அவரிடம் கேட்டபோது உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார். சூர்யா ஒரு மோசடி பேர்வழி என்பதை புரிந்துகொண்ட அந்த இளம்பெண் போலீசில் புகார் சொல்லி விடுவேன் என்று பதிலுக்கு மிரட்டியிருக்கிறார். இதையடுத்து சூர்யா செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கிறார்.

கானாத்தூர் போலீசில் இதுகுறித்து இளம்பெண் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்திருக்கின்றனர். சூர்யாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தாலும் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது கோவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அந்த சிக்னல் காட்டியிருக்கிறது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்று அந்த தனியார் விடுதியில் சென்று பார்த்தபோது அங்கே ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் சூர்யா.

சென்னையில் ஒரு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பணத்தை எல்லாம் கறந்துவிட்டு கோவையில் அடுத்து ஒரு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டுள்ளனர். சூர்யாவுடன் இருந்த அந்த இளம்பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது தெரிந்ததால் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, சூர்யாவை கானாத்தூர் அழைத்து வந்து விசாரித்த போது போலீசார் அதிர்ந்தனர்.

அவரின் தந்தை பெங்களூரில் உளவுத்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. ஒரு உயர் அதிகாரியின் மகன் பொறியியல் படித்த மாணவர் இப்படியா செய்வது என்று நினைத்த போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் சூர்யா.

சூரியாவிடம் துருவித்துருவி விசாரித்ததில், கானாத்தூரைச் சேர்ந்த அந்த இளம்பெண், கோவையில் விடுதியில் இருந்த அந்த இளம் பெண் மட்டுமல்ல திருச்சி, கோவை, செங்கல்பட்டு, சென்னை, மதுரை என்று பல ஊர்களில் இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படித்தான் ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து பணம் நகைகளை பறித்திருகிறார் என்று தெரியவந்தது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த பெண்களின் புகைப்படங்களையும் தனது செல்போனில் வைத்திருந்திருக்கிறார்.

பெண்களிடம் மோசடி செய்து சேர்த்த பணத்தில் பாதாம், பிஸ்தா,முந்திரி என்று சாப்பிட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கானாத்தூர் பெண்ணிற்கு முன்னே ஆறு பெண்கள் துணிந்து புகார் அளித்திருப்பதும், ஆனால் போலீசிடம் சிக்காமல் தப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள அவர் தாய் தந்தைக்கு போலீசார் தகவல் சொல்லியபோது, தன் மகன் நல்ல வேலை செய்கிறேன் என்று சொல்லி மாதம் தோறும் நிறைய பணம் அனுப்புவார். அதனால் நல்ல வேலையில் இருக்கிறான் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சூர்யாவிடம் தற்போது இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தையும் கார் ஒன்றினையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

செய்தியளர் ரமேஷ்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button