தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தில் முற்றுகை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இரண்டு மாத காலமாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று, பின்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 10 சதவீத கூலி உயர்வு அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இதுவரை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி உயர்வு வழங்கவில்லை என்பதை கண்டித்தும், நூலுக்கான சேலையின் எண்ணிக்கையை விட 3 சேலை அதிகரித்து விசைத்தறி உரிமையாளர்கள் கேட்பதை கண்டித்தும், மாஸ்டர் வியூவர்ஸ் அசோசியேசன் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் முதலாளிகளிடம் தொழிலாளர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்