கட்சி மாறுப்படுன்றி அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில், நீட் நுழைவு தேர்வை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் என்றும், ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி மாறுப்படுன்றி அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைபாடு.
இதை பற்றி தேர்தல் நேரத்தில் உறுதி தந்தோம். ஆட்சி வந்ததும் அய்வு செய்து மக்கள் கருத்தை அறிக்கையாக வழங்குவதற்காக குழு அமைக்கப்பட்டது.
இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து அந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையை வைத்து சட்ட ரீதியாக ஆலோசனை பெறப்பட்டு, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும் என்று கூறினார்.