செய்திகள்

தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

தென்காசி மாவட்டம் நெல் கட்டும் செவல் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் பிறந்தவர், முதல் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன். இவர் தான் 1755 ம் ஆண்டு சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் ஆவார். 1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடந்த போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார் என வரலாறு கூறுகிறது.

இவரது நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அப்போது பச்சேரியில் உள்ள நினைவு தூண் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள நினைவு மணி மண்டபத்தில் மாவீரர் ஒண்டி வீரரின் வாரிசுதாரர்கள், பல வேறு மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

ஆனால் சென்ற ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததாலும், தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாலும் இந்நிகழ்விற்கு தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் வெளி மாவட்ட பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

அதே போல் இந்த ஆண்டும் கொரானோ பெருந்தொற்று காரணமாக நினைவு தின நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

அதன் படி இன்று பச்சேரி கிராமத்தில் உள்ள மாவீரர் ஒண்டி வீரரின் நினைவு தூணுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும் இந்த விழாவிற்கு அதிமுகவின் முன்னாள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அமைச்சர் ராஜ லெட்சுமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி மற்றும் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த்தன், தமிழ் வேந்தன், சந்திரசேகர், முருகன், நாகமணி என திரளானோர் கலந்து கொண்டு மாவீரர் ஒண்டி வீரரின் நினைவு துணிற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் பாதுகாப்பு பணிக்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் தலைமையில் 4 மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்கள், 10 மாவட்ட துணை காவல் துறை கண்காணிப்பாளர்கள், 36 காவல் துறை ஆய்வாளர்கள் உட்பட 1242 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button