மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்து மக்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை தாங்கினார் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளரிடம் கூறியதாவது
பாரதிய ஜனதா கட்சி மதுரை மாவட்டத்தின் சார்பாக வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்கள் கணிசமாக இருக்கக்கூடிய பகுதிகளில் மக்களின் மனநிலையை தவறான நிலையில் திமுகவின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஆட்சிதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திமுக நீட் தேர்விற்கு விலக்கு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அப்பாவி மாணவர்களின் குடும்பத்தார்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு இவர்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாள் ஆகியும் அது சம்பந்தமாக எந்த ஒரு நிலையும் எடுக்காமல் மக்களை ஏமாற்றுவதற்காக புதிய சட்டத்தை கொண்டு வருவோம் நாங்கள் ஜனாதிபதி சந்தித்து சரியான முறையில் முறையீடு செய்வோம் என்று அடுத்த ஏமாற்று வித்தை காட்டுகிறார்கள் திமுக என்பது பொய்யும் அராஜகம் கட்சி என்பது மக்களுக்கு தெளிவாக தெரிகிறது மத்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டினை எதிர்க்கக்கூடிய தொடர் பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொஞ்சம் கூட சட்டத்தை படித்து பார்த்தும் என்று கூட தெரியாமல் மத்திய அரசு நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்கிறது என்று கூறுகிறார். பத்திரிக்கையாளர் மற்றும் சட்டமன்றத்தில் கூறுவது ஜனநாயக முறையில் ஆட்சி செய்யவில்லை மக்களை திசை திருப்புகிற வகையில் மக்களை தவறான முறையில் வழிநடத்துகிறார் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது.பிரதமர் மோடி அவர்கள் சரியான முறையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் தேசம் பாதுகாப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறது திமுகவின் தொடர் பொய் பிரச்சாரங்களை வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்களுக்கு தெளிவுபடுத்தி இந்த திமுக என்ற அராஜக ஆட்சியை தமிழகத்தில் வேரோடு மண்ணோடு தூக்கி எறிவது பாஜகவின் நிலைப்பாடு அதற்காக பிரச்சாரம் செய்கிறோம்
வருகிற 10-ஆம் தேதி அன்று பல்வேறு இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தியை விழாவிற்கு குறிப்பாக வழிபடுவதற்கான சிலை வைப்பதற்கான ஆயத்தப் பணிகளை ஈடுபட்டுக்கொண்டிருந்தை தடுப்பதற்காக காவல்துறையினர் இந்து மதத்தினரின் நம்பிக்கையையும் வழிபாட்டு முறைகளையும் சீரழிக்க வேண்டும் எண்ணத்தோடு திமுகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது காவல்துறை மீது எங்களுக்கு மரியாதை உள்ளது காவல்துறை அரசின் கைப்பாவையாக இருக்கக்கூடாது சாராயக் கடையில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது பல கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் தரக்கூடிய ஒரே காரணத்திற்காக மக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் மிகக்கேவலமாக பெண்களின் தாலியை பறிக்கக்கூடிய அரசாக திமுக இருந்து கொண்டு இவர்கள் விநாயகர் சதுர்த்தியை தடுப்பதற்காக என்ன யோக்கியதை இருக்கிறது கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வழிபாடுகளை நடத்துவோம் என பல இந்து அமைப்புகள் சொல்லியும் கூட காவல்துறை வைத்து அடக்கு முறையை கையாள்வது திமுக அரசு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது கடவுள் மறுப்பு கொள்கை யார் சொல்கிறார்கள் அவருக்கு சாதகமாக உள்ளது இந்து அமைப்புகள் நடத்தக்கூடிய சதுர்த்தி விழாவில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள் பாஜக சமூகத்தின் நல்லிணக்கத்தை மிகச் சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகிறது
பேட்டி வேலூர் இப்ராஹிம் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர்