செய்திகள்

நாகை அருகே இருச்சக்கர வாகனமும் ஆட்டோவும் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடி, கீழத்தெருவை  சேர்ந்தவர் ஞானசம்பந்தம் மகன் சசிக்குமார் (வயது 26) கூலி தொழிலாளி. இவருக்கு திருமாணமாகி 5 மாதம் ஆகிறது. நேற்று கீழ்வேளூரில்  தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்கி கொண்டு, கோகூர் சாலையில்  தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டி சோழமங்கலம் வளைவில் செல்லும் போது எதிரே இலுப்பூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், சசிக்குமாருக்கு தலை மற்றும் கைகளில்  பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த சசிக்குமாரை அக்கம்பக்த்தினர் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சசிக்குமார் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் : ச.ராஜேஷ், நாகை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button