செய்திகள்

14 வயது சிறுமிக்கு குழந்தை, 17வயது சிறுவன் கைது

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தென்றல் நகரில் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார்.

இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் 14 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுவன், சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து,சிறுமி இரண்டு மாதத்தில் கர்ப்பம் ஆனார். பின்னர், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

சிறுமிக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவமனையிலிருந்து ஆவடியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆய்வாளர் லதா தலைமையில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 17வயது சிறுவனை போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவனை திருவள்ளூரில் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருத்துவ சிகிச்சை முடிந்ததும் அவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பெண்கள் காப்பகத்தில் நடக்க உள்ளதாக மகளிர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button