அரசியல்செய்திகள்

‘ஒரே இரவில் ஜேசிபி மூலம் அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன்’ – சீமான்

தன்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் .

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் , எதற்காக சாலை வரி வாங்குகிறீர்கள், நான் வைத்திருக்கும் காரின் விலை ரூ .21 லட்சம் , ஆனால் இதுவரை ரூ .3 லட்சம் சாலை வரிக்காக செலுத்தி இருக்கிறேன் என கூறியுள்ளார்.

ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்க எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது, அங்கு எத்தனை ஆண்டுகள் சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்படும் என்பது தொடர்பான எந்த விவரமும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரு 5 வருடம் மட்டும் ஆட்சியை என்னிடம் கொடுத்து பாருங்கள், ஒரே இரவில் தமிழகத்தின் சுங்கச்சாவடிகளை ஜேசிபி மூலம் அகற்றிவிடுவேன் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

என் மாநில சாலையை நான் பராமரித்து கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு ஆள் இல்லை. இதுதான் இங்கு பிரச்னையே என்று அவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button