அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
திறந்தவெளியில் கூட்டம் நடைபெறுவதையும், கொரோனா தடுப்பு விதி பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் எனவும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் எனவும் தமிழக அரசு கூறியிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கிராம சபை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேருந்தொற்று காரணமாக கிராம சபைக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 2 தினங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு