அமெரிக்காவில் கொரோனா 3-வது அலை பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,13,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,084 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,75,019 ஆக இருந்தது. மேலும் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.622. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று மீண்டவர்கள் எண்ணிக்கை 4,93,475.
இதனையடுத்து உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,40,16,981 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,87,337. உலக நாடுகளில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 21,08,33,041.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,13,946 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் 2,084 பேர் அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,159. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,186,936. அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 713,833. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33,613,117.
அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நேற்று மட்டும் 36,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்தில் நேற்று கொரோனாவால் 150 பேர் மரணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இருக்கிறது துருக்கி. துருக்கியில் நேற்று 29,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. துருக்கியில் நேற்று மட்டும் 227 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இந்தியாவில் நேற்று 23,139 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் நேற்று 309 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். ரஷ்யாவில் நேற்று 22,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 857 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். ரஷ்யாவைப் போல மெக்சிகோவிலும் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. மெக்சிகோவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 700; பிரேசிலில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 643 ஆக பதிவாகி உள்ளது.