திருநெல்வேலி டவுண் நயினார் குளம் வேன் ஸ்டாண்ட் அருகே இன்று காலை வேணும் அரசு பேரூந்தும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி சென்ற போது அவ்வழியாக வந்த மூதாட்டி மீது மோதி கால் துண்டானது பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி டவுண் பாறையடியை சேர்ந்த சூரியன் என்பவரின் அம்மா என்பது தெரிய வந்தது.
நயினார் குளம் சாலையில் அமைந்துள்ள வேன் ஸ்டாண்டு மற்றும் லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
நயினார் குளம் சாலையானது குறுகிய சாலை தினம்தோறும் ஆயிரம் கனக்கான வாகனங்கள் செல்கின்றன இதனால் எப்போதும் பரப்பரப்பாகவே காணப்படும்.இந்த சாலையில் பேரூந்து நிறுத்தம் அருகே வேன் மற்றும் லாரி ஸ்டாண்டு டீ கடை என ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து போலிஸார் அதிகாரிகள் சொல்லும் போது மட்டும் அந்த பகுதி ஆக்கிரம்மிப்புகளை கவனிக்கின்றனர் மற்ற நேரம் தலைகவசம் அணியாமல் வருபவர்கள் மீது அபராதம் செலுதத்துவதிலயே குறிகோளாக உள்ளனர்.நயினார்குளம் சாலையில் வாகன நெரிசலால் விபத்து ஏற்படும் சூழ்நிலை என்று நடவடிக்கை எடுக்க பல முறை சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் காற்றில் பறக்கவிட்ட போக்குவரத்து போலிஸாரால் விளைவு இன்று மூதாட்டி கால் இழந்துள்ளார்
சாலையினை ஆக்கிரமிப்பு செய்து உள்ள வேன் ஸ்டாண்ட் மற்றும் பெட்டி கடைகள் லாரிகளை அப்புறப்படுத்த போக்குவரத்து போலிஸாரும் மாநகராட்சி ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கிறார்கள்