ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.