மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து பாப்பாபட்டி கிராமத்துக்கு காரில் சென்றார். வழியில், கே.நாட்டாபட்டியில் பெண்கள் வயலில் வேலை பார்ப்பதை அவர் பார்த்தார். உடனடியாக அங்கு காரை நிறுத்தி இறங்கிய மு.க.ஸ்டாலின், வரப்புகளில் நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார்.
அவரைக் கண்டதும் பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வரப்பு வழியாக நடந்து வந்து தங்களிடம் பேசியதைக் கண்டதும் அவர்கள் திக்குமுக்காடிப்போய் நின்றனர்.
பின்னர், தங்கள் தேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர். அதனை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார்.
#visilmedia #todaynewstamil #topnews #tamilnadu #mkstalin #madurai