சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்து தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் மும்பையில் விசாரணை நடக்கிறது.
மும்பையில் இருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதை விருந்து நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் நடிகர்கள், நடிகர்களின் மகன்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும், பார்ட்டியில் அனைவரும் ஹசிஷ், எம்டி, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி போதை விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 8 பேரை அதிகாரிகள் பிடித்தனர். பிடிபட்டவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே பேட்டியில் தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #sharukhan #