அறுவை சிகிச்சையின் போது அழுத நபருக்கு மருத்துவமனை நிர்வாகம் பில் தொகையில் அதனை குறிப்பிட்டு 800 ரூபாய் சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை தொடர்பான அனுபவம் பெரும்பாலானோருக்கு இருக்கும். மருத்துவமனைக்கு சென்றுவிட்டால் அறுவை சிகிச்சை என்ற பெயரில் பணம் பறிப்பது அதிகமாக உள்ளது.
ஆனால் அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் சற்றே வித்தியாசமானது. இது குறித்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு மச்சத்தை நீக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது அந்த பெண் அழுததாக தெரிகிறது. இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப்பெண்ணிடம் இருந்து லேசாக உணர்ச்சிவயப்படுதல் என்ற பெயரில் 11 டாலர் (ரூ.816) கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #amercia #medical #doctors #hospital #emotion #briefemotion #செய்திகள் #மருத்துவம்