தூத்துக்குடி மாவட்டம்
தட்டார்மடம் அருகே உள்ள வடக்கு நரையன்குடியிருப்பு கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள வடக்கு நரையன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவரது மகன் ஜெயக்குமார்.(55)
கூலித் தொழிலாளியான ஜெயக்குமாருக்கு கலா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, சங்கீதா என்ற மகள்களும் உள்ளனர்.
ஜெயகுமார் மதுபோதையில் தினமும் குடும்பத்தினரோடு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் மது குடித்துவிட்டு மனைவி மற்றும் மகள்களுடன் ஜெயக்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயக்குமார் மீண்டும் தகராறில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அருகில் உள்ள வேப்பமரத்தில் அவரது மனைவி கலா கயிற்றால் கட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஜெயக்குமார் பின் தலையில் காயம் பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தட்டார்மடம் போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமார் உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மதுபோதையில் நிலைதடுமாறி கீழே விழுந்துததில் தலையில் அடிபட்டு ஜெயக்குமார் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து ஜெயக்குமார் மனைவி கலா மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topmews #news #thoothukudi #crime #செய்திகள் #தூத்துக்குடி