தொழில்நுட்பம்
Trending

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் சில மணி நேரமாக முடங்கி உள்ளன.
சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வாட்ஸ்-அப் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துளளது.

இன்றைய நவீன உலகில் பேஸ்புக்(Facebook), இண்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

செய்திகளை அறிந்து கொள்ளவும், ஒருவருக்கு செய்திகளை அனுப்பவும், புதிய தகவல்களை அறிந்து கொள்ளவும் மிகவும் உதவிகரமாக உள்ளன.

இந்த நிலையில் வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் பல இடங்களில் முடங்கி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சேவை முடங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சேவைகள் முடங்கி உள்ளன. இன்ஸ்டாகிராமின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள், சேவை முடங்கியதாக புகார் அளித்தனர்.

25,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கல்கள் உள்ளதாக புகாரளித்தனர். பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களும் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த திடீர் சேவை முடக்கத்தால் வாட்ஸ்-அப்பில் செய்திகளை அனுப்பவும், வரும் செய்திகளை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. சில மணி நேரமாக இந்த சேவைகள் முடங்கி இருக்கின்றன.

இந்த சேவைகள் முடக்கம் குறித்து, பயனர்கள் .ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர், இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த சேவைகள் இயங்ககவில்லை என்று ஹாஷ்டேக்கில் போட்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியுளளதாகவும், சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்-அப் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துளளது.

மார்ச் மாதம்
தற்போது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், அதுவும் சென்னை அணியின் மேட்ச் நடந்து வரும் நிலையில் இது தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட முடியவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வருத்தப்பட்டனர். இந்த ஆண்டு மார்ச் மாதம், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் மற்றும் புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் உலக அளவில் செயல்படாமல் முடங்கிய போது ​​இந்தியா உட்பட உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் அது குறித்து புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

#visilmedia #todaynewstamil #topnews #news #whatsapp #Facebook #instagram

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button