நம் பெற்றோரோ பெரியோர்களோ நகத்தைக் கடிக்காதே உடலுக்கு நல்லது இல்லை என்று கூறக் கேட்டிருப்போம்.ஆனால் என்ன கெட்டது நடக்கும் என அவர்கள் தெளிவாக சொல்வதில்லை.
உலகம் முழுவதும் 30% மக்கள் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். நகம் கடிப்பதால் வரும் பின்விளைவுகள் குறித்து பார்ப்போம்.
1.தோல் தோற்று
நகம் கடிப்பதால் அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் வாயினுள் செல்லும்போது ஈறுகளில் வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். சில நேரங்களில் சீழ் படிந்து தாங்க முடியாத வலியையும் ஏற்படுத்தலாம். ஆகவே இவற்றை தவிர்க்க நகம் கடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
2. நடக்க இயலாமை
பாரோனைசியா போன்ற பாக்டீரியாக்கள் உங்கள் உடலுக்குள் சேர சேர உங்களது பாதங்களைச் சேதாரமாக்கலாம். இது தீவிரமானால் உங்களால் நடக்க முடியாமல் கூட போகலாம்.
3. நகம் கடிப்பதால் நகத்திற்கே பிரச்சினையா?
இதுவரையில் நகம் கடிப்பதால் நமது உடலுக்கு தீங்கு என பார்த்தோம். ஆனால் நகம் கடித்தால் நகத்திற்கே பிரச்சினை ஏற்படலாம் என ஆய்வு சொல்கிறது. அதாவது தொடர்ந்து நகம் கடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நகம் வளராமல் கடிக்க கூட நகம் இல்லாமல் போகலாம். இதைச் சரிசெய்வது சாத்தியமற்ற ஒன்று.
4. பற்களுக்கு பாதகம்
நகம் கடிப்பதற்கு ஆதார சுருதி பற்கள் தான். நகம் கடிப்பதால் பற்கள் பலவீனமாகலாம். இதனால் பற்கள் உடைந்தோ அல்லது வலுவிழந்தோ போகலாம். அதேசமயம் சிறுவயதிலிருந்தே இந்த பழக்கம் இருந்தால் பற்கள் வளைந்து அசௌகரியமான தோற்றத்தைக் கொடுக்கலாம்.
5. செரிமான கோளாறு
நகம் கடிக்கும் போது வாய்க்குள் செல்லும் பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள்ளும் செல்லும். அப்படி செல்லும்போது அடிவயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான கோளாறுகளும் ஏற்படலாம். ஆகவே இனி நகம் கடிப்பதற்கு முன் இதையெல்லாம் யோசித்துவிட்டு கடிக்கலாமா, வேண்டாமா என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.
#visilmedia #news #health #nail #நகம் #ஆரோக்கியம்