பெண் சிசு கொலை முயற்சி புகாரை அடிதடியாக மாற்றின காவல்துறை, கட்டப்பஞ்சாயத்து செய்யும் கிருஷ்ணகிரி மகாராஜகடை காவல் நிலைய போலீசார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் யோகப்பிரியா, மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் இருவர் காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், நிலையில் யோகப்பிரியா கூறும்போது தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் தினமும் தன்னை கணவர் முனி குமார் துன்புறுத்துவதாகவும், குழந்தையை சிசுக் கொலை செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய கணவன் முனி குமார் மற்றும் மாமியார் வீட்டார் வற்புறுத்துவதாகவும், கணவனின் தம்பி தன்னிடம் ஆபாசமாக பேசுவதாகவும் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாகவும் , இது குறித்து பேச வந்த தன்னுடைய இரு சகோதரர்களையும் கணவனுடைய தம்பி மாமியார் மாமனார் ஆகிய 4 பேரும் தெருவில் உருட்டு கட்டையால் அடித்து விரட்டியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யோக பிரியா அங்கு வந்த விசாரித்த காவல்துறை உதவி ஆய்வாளர் இடம் தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார், தனது கணவன் குழந்தையின் தொடையில் கத்தியால் குத்திய புகைப்படம் மற்றும் முனிவரின் குடும்பமே சேர்ந்து தனது தம்பிகளை அடிக்கும் வீடியோவை வைத்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளுக்கும் தனக்கும் தன்னுடைய கணவன் குடும்பத்திலிருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் வந்த போலீசார் யோகப் பிரியாவை புகாரை வேறுவிதமாக எழுத வேண்டும் என்று சொல்லி குழப்பி திசை திருப்பியுள்ளனர், மேலும் வாக்குமூலம் எடுக்க வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் மணி என்பவர் நீயே புகார் எழுதிக் கொடு என்று பேப்பரில் எழுதி வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை இதுகுறித்து யோக பிரியா காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது , உன்னுடைய கணவர் வீட்டு பக்கமும் உங்கள் மீது புகார் கொடுத்திருப்பதால் உங்கள் மீதும் எப்ஐஆர் போட்டு உள்ளதாகவும், உங்களுடைய ஆதார் கார்டு கொடுக்காததால் உங்கள் புகாருக்கு இன்னும் எப்ஐஆர் போட வில்லை என்றும், அங்கு இருந்த பெண் போலீசார் கூறியுள்ளார். மேலும் சிசு கொலை மற்றும் பெண் சித்ரவதை என்ற பிரச்சினை எல்லாம் விட்டுவிட்டு அடிதடி கேஸாக தன்னுடைய கணவன் குடும்பத்துக்கு ஆதரவாக போலீசார் வழக்கை மாற்றி எழுதுகின்றனர் என்று யோக பிரியா கதறுகிறார். மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் காவல்துறையே இப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மகாராஜகடை போலீசார் குற்றவாளிகளான தனது கணவன் குடும்பத்தை விட்டுவிட்டு தங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளும் அவர்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும் யோக பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும் பெண் குழந்தையை கொல்ல முயற்சித்த முனி குமார் மற்றும் அவருடைய தகப்பன் தொட்டிலியப்பன் ஆகியோர் மீது ஏற்கனவே நில மோசடி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி பகுதியில் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ய முயற்சித்த இந்த சம்பவம் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #childabuse #krishnagiri #tamilnadupolice #தமிழ்நாடுபோலீஸ் #கிருஷ்ணகிரிபோலீஸ் #கிருஷ்ணகிரி #பெண்சிசுகொலை