மதுரை ஆனையூர் அருகே எஸ்.பி.பி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக்தி கண்ணன், அவருடைய மனைவி சுபா ஆகியோர் வாடகைக்கு வசித்து வந்தவர்.
இந்தத் தம்பதிக்கு 17வயதில் காவியா என்ற மகளும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று இரவு, பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் வீட்டின் கீழே உள்ள அறையில் படுத்திருந்த சக்திகண்ணனின் பிள்ளைகளும் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி கண்ணன் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். கணவன் – மனைவி இரண்டு பேரும் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #AC #ஏசி #ஏசிமின்கசிவு