திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளை தனியார் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இதில், ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சூப்பர்வைசராக குணசேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் குணசேகர் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு வேலை வேண்டும் என்றால் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும், தனக்கு வேண்டியவர்களுக்கு சுலபமான வேலைகளையும், தனது ஆசைக்கு இணங்காதவர்களுக்கு கடினமாக வேலையும் வழங்கி தொல்லை கொடுத்து வந்தார்.
இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர் சுசீலா என்பவருக்கு குணசேகர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று, குணசேகர் சுசீலாவுக்கு போன் செய்து, திருச்சானூர் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து வைத்துள்ளதாகவும், தனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவரும் ஒப்புக் கொண்டது போல பேசி, திருப்பதியில் உள்ள மகளிர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் அளித்து அவர்களையும் அழைத்துக்கொண்டு திருச்சானூரில் உள்ள லாட்ஜ் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு காத்திருந்த குணசேகர், மகளிர் சங்க நிர்வாகிகளைக் கண்டதும் தப்பித்து ஓட முயற்சித்துள்ளார். அவரை மடக்கி பிடித்த மகளிர் சங்க நிர்வாகிகள் அவரை செருப்பால் அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கையை ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று மகளிர் சங்க நிர்வாகிகள் கூறினர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்