இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன எனவே மின்சாரத்தில் பற்றாக்குறையால் மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரியவருகிறது.
நாட்டின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது. நாடு முழுதும் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, போதிய நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி குறைந்து உள்ளது இந்நிலையில், மின் தடையைச் சந்திக்க நேரிடும் நிலையில் உள்ளதாக டெல்லி, தமிழ்நாடு, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரு மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுவிட்டது.
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 முதல் 4 மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஏப்ரல் மாதம் முதல் பெய்த மழையின் காரணமாக நிலக்கரிச் சுரங்கங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி இல்லாத நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றாலும் கடந்த சில வாரங்களில் நிலக்கரியின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், உலகம் முழுவதுமே நிலக்கரியின் தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளதுதான்.
கொரோனா காலகட்டத்தில் மின்தேவை குறைந்து பல அனல் மின் ஆலைகள் உற்பத்தியை குறைத்தன. ஆனால், இப்போது கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால், உலகம் முழுவதுமே மின் தேவை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் நிபுணர்கள். இன்னும் சில நாட்களில் நிலைமை விரைவில் சீரடையும் என ஒன்றிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #இருள்இந்தியா #நிலக்கரிபற்றாக்குறை